மரணம் பற்றிய 30 பைபிள் வசனங்கள்

மரணம் என்பது வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஒரு பகுதி, ஆனால் கிறிஸ்து இயேசுவை நம்புவோர்களுக்கு அது முடிவல்ல. ஆறுதல், அமைதி மற்றும் நித்திய ஜீவனின் உறுதிப்பாட்டை வழங்குகிறது. இந்தக் கட்டுரை மரணத்தைப் பற்றிய 30 வேத வசனங்களை சுட்டிகாட்டுகிறது. மற்றும் நித்திய ஜீவனின் வழிகாட்டுதலையும் ஆறுதலையும் வழங்க இந்த வசனங்கள் கருப்பொருள்களாய் தொகுக்கப்பட்டுள்ளன. நீங்கள் ஒரு அன்புக்குரியவரின் மரணத்தால் துக்கப்படுகிறீர்களா ?அல்லது மரணத்திற்குப் பிறகு வாழ்க்கையைப் பற்றி வேதம் என்ன சொல்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறீர்களா? இந்த வசனங்கள் நம்பிக்கையை அளிக்கின்றன.

மரணத்தைப் பற்றி வேதம் என்ன சொல்கிறது?

மரணம் வாழ்க்கையின் இயல்பான பகுதி என்றும், பாவம் உலகிற்குள் நுழைந்ததன் விளைவே மரணம் என்றும் வேதம் கற்பிக்கிறது.

ஆதியாகமம் 2:17 கூறுகிறது, “ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்.” இந்த வசனம் பாவத்திற்கும் மரணத்திற்கும் இடையிலான தொடர்பை எடுத்துக்காட்டுகிறது.

  • ஆதியாகமம் 3:19 : “நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்.”
  • ரோமர் 5:12 : “இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று .”

வேதத்தின்படி நாம் இறக்கும்போது என்ன நடக்கும்?

நாம் இறக்கும் போது, நமது உடல்கள் பூமிக்குத் திரும்புகின்றன, ஆனால் நமது ஆத்துமாவும் ஆவியும் தொடர்ந்து இருக்கின்றன என்று பைபிள் கற்பிக்கிறது.

பிரசங்கி 12:7 கூறுகிறது, ” இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத்தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகும்.”

  • சங்கீதம் 104:29 : “நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள , அவைகள் மாண்டு, தங்கள் மண்ணுக்குத் திரும்பும்.”
  • லூக்கா 23:43 : “இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.”

மரணத்தைப் பற்றிய இந்த வேத வசனங்கள், சரீர மரணம் என்பது முடிவு அல்ல, நித்தியத்திற்கு மாறுவது என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன.

மரணம் மற்றும் நியாயத்தீர்ப்பு பற்றிய வேதவசனங்கள்

தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பவர்களை ஜீவ புத்தகம் தீர்மானிக்கிறது.

  • 2 கொரிந்தியர் 5:10 : “ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.”
  • எபிரெயர் 9:27 – “அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே.”
  • வெளிப்படுத்தின விசேஷம் 20:12 – “மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது;”
  • வெளிப்படுத்தல் 20:15 – “ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.”
  • தானியேல் 12:2 – “பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள் “

கிறிஸ்து இயேசுவின் மூலம் நித்திய ஜீவனைப் பற்றிய வேத வசனங்கள்

இயேசு தம்மை விசுவாசிக்கிற அனைவருக்கும் நித்திய ஜீவனை அளிக்க வந்தார் . பின்வரும் வேத வசனங்கள் இந்த வாக்குறுதியை எடுத்துக்காட்டுகின்றன:

  • யோவான் 3:16 – “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”
  • யோவான் 5:24 – “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
  • யோவான் 10:28 – “நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதுமில்லை.”
  • ரோமர் 6:23 – “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.”

பிரியமானவர்களின் மரணத்தால் துக்கப்படுபவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வேத வசனங்கள்

அன்புக்குரியவரை இழப்பது வேதனையானது, ஆனால் ஆறுதல் தரும் வேத வசனங்கள் துக்க காலங்களில் தேவ சமாதனம் மற்றும்நம்பிக்கையையும் நமக்கு நினைவூட்டுகின்றன.

  • 1 தெசலோனிக்கேயர் 4:13 – “அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. “
  • வெளிப்படுத்தின விசேஷம் 21:4 – ” அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது. “
  • சங்கீதம் 34:18 – “நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார் .”

மறுபடியும் பிறந்த ” ஒருவர் இறக்கும் போது, அவர் உடனடியாக கிறிஸ்துவுடன் பரம வீட்டில் இருக்கிறார்.

  • பிலிப்பியர் 1:21 – “கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.”
  • பிலிப்பியர் 1:22 – “ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன்.”
  • பிலிப்பியர் 1:23 ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன்; தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்;
  • 2 கொரிந்தியர் 5:8 – “நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத் தேகத்தைவிட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்.”

மரணத்தின் மீது இயேசுவின் வெற்றியும் மற்றும் மகிமையின் நம்பிக்கையும்

  • இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் , நாம் மரணத்தின் மீது வெற்றி பெற்று நித்திய மகிமைக்கான நம்பிக்கையைப் பெற்றுள்ளோம்.
    • 1 கொரிந்தியர் 15:55 – “மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?”
    • 1 கொரிந்தியர் 15:57 கூறுகிறது, “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.”
    • 2 தீமோத்தேயு 1:10 – ” நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்.”
    • ரோமர் 8:11 – ” அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார். “

மறுமை வாழ்வு மற்றும் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை பற்றிய வாக்குறுதி

மரித்தோரின் உயிர்த்தெழுதல் கிறிஸ்தவத்தின் மையக் கருப்பொருளாகும், இது இயேசுவை விசுவாசிக்கிறவர்களுக்கு நம்பிக்கையைத் தருகிறது.

  • 1 கொரிந்தியர் 15:20 – ” கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.”
  • யோவான் 11:25 – “இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.”
  • 1 கொரிந்தியர் 15:42 – ” மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்;”

கர்த்தரின் வருகையும் எக்காள சத்தமும்

கர்த்தருடைய இரண்டாம் வருகை உயிர்த்தெழுதலையும் இறுதி நியாயத்தீர்ப்பையும் கொண்டுவரும்.

  • 1 தெசலோனிக்கேயர் 4:16 – “ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். “
  • 1 தெசலோனிக்கேயர் 4:17 – “பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.”
  • 1 கொரிந்தியர் 15:52 – “எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.”

முடிவுரை

மரணம் மற்றும் நித்திய ஜீவனைப் பற்றிய வேத வசனங்கள் மரணம் முடிவு அல்ல என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன. கிறிஸ்து இயேசுவின் மூலம், நமக்கு நித்திய ஜீவனின் வாக்குறுதியும் உயிர்த்தெழுதலின் நம்பிக்கையும் உள்ளது . நம்பிக்கை இல்லாதவர்களைப் போல நாம் துக்கப்பட வேண்டியதில்லை, ஏனென்றால் கர்த்தர் நமக்காக ஒரு இடத்தைத் தயார் செய்திருக்கிறார். இந்த வேத வசனங்கள் உங்கள் விசுவாசத்தை வலுப்படவும், உங்களுக்கு ஆறுதலைத் அளிக்கவும் , மகிமையின் நம்பிக்கையுடன் வாழ உங்களை ஊக்குவிக்கட்டும்.

இந்த வசனங்கள் இயேசு கிறிஸ்துவின் மூலம் நமக்கு மரணத்தின் மீது வெற்றியும் மற்றும் பரலோகத்தில் நித்திய மகிழ்ச்சியின் வாக்குறுதியும் கிடைக்கின்றன என்பதற்கு அமைதியையும் உறுதியையும் அளிக்கட்டும்.