தொழிலாளர் தின வரலாறு
உலகமெங்கும் மே 1 தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. மே 1 ,1886 அன்று 13,000 வங்கிகளிலிருந்து சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை விட்டு அமெரிக்காவின் தெருக்களில் நின்று எட்டு மணிநேர வேலை மற்றும் சிறந்த வேலை சூழலுக்காக கோரிக்கை வைத்தனர். இது வரலாற்றில் முதல் மே தின கொண்டாட்டமாக கருதப்படுகிறது.
வரலாற்றில் இன, பாலின மற்றும் பொருளாதார பாகுபாடுகளுக்கு எதிரான இதுபோன்ற பல போராட்டங்களை நாம் காணமுடியும். பல தலைவர்கள் சுதந்திரத்திற்கும், சமத்துவத்திற்குமான போராட்டங்களில் தங்கள் உயிரையே தியாகம் செய்திருக்கிறார்கள்.
உலகெங்கிலுமுள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்கள் நாட்டு மக்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை வழங்குவோம் என வாக்கு கொடுத்தாலும் அதை முழுமையாக நிறைவேற்ற அவர்களால் முடிவதில்லை . அரசாங்கங்கள் சக்திவாய்ந்தவையாக இருந்தும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது ஒரு பெரும் போராட்டமாகவே இருக்கிறது. ஏனென்றால் மனிதனுடைய செயல்திறன் வரையறுக்கப்பட்ட ஒன்றாகும், அவனால் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண இயலாது.
இளைப்பாறுதலுக்கான அழைப்பு
சரித்திரத்தில் ஒருவர் இதற்கு விதிவிலக்காக பாரம்சுமக்கும் மக்களுக்கு ஓய்வு அளித்தார். அவருடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் உண்மையாக இருந்தது, அவர் தரும் சலுகை இன்னமும் எல்லாருக்கும் கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. அவர் வேறு யாருமல்ல, போராடும் மனித மனதிற்கு ஓய்வளிக்க இந்த உலகிற்கு வந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே!
“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்”. (மத்தேயு 11:28-30)
இயேசு வழங்கும் ஓய்வு சரிர ரீதியானது அல்ல மாறாக அது ஆத்தும இளைப்பாறுதலும், கலங்கின உள்ளங்களுக்கு அருளப்படும் நிம்மதியும் ஆகும். பரிசுத்த வேதாகமம் சொல்கிறது, “அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்”. பிலிப்பியர் 4:7
முதல் வசனத்தில் இரண்டு பகுதிகள் உள்ளது (மத்தேயு 11:28):
1.) இயேசு நம் ஒவ்வொருவரையும் தன்னிடத்தில் வரும்படி அழைக்கிறார், அவர் இரக்கமுள்ளவர். நம்முடைய போராட்டங்களை புரிந்து கொள்ளுகிறார்.
அவரை நம்பும்போது உங்களுடைய எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படும் அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷத்தாலும், சமாதானத்தாலும் நிரம்பும் மட்டுமன்றி நீங்கள் அவரில் இளைப்பாறுதலை கண்டுகொள்ள முடியும்.
2.) என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என இயேசு வெளிப்படுத்துகிறார். நுகம் என்பது இரு விலங்குகளை இணைக்க பயன்படுத்தப்படும் விவசாய உபகாரணத்தின் ஒரு பாகமாகும். இதன்மூலம் அவைகள் பணிச்சுமையை சமமாக பகிர்ந்து கொள்வதுமின்றி அதிக உற்பத்தியும் செய்திட முடியும். சில நேரங்களில், ஒரு வயதான அதிக அனுபவம் வாய்ந்த விலங்கு, இளைய குறைந்த அனுபவம் கொண்ட ஒரு விலங்குடன் இணைக்கப்படுகிறது. அப்படி இணைந்து வேலை செய்யும்போது, வயதில் முதிர்ந்த விலங்கு, இளைய விலங்கிற்கு வேலையோடு கூட பயிற்சியும் அளிக்க முடியும்.
உண்மையான இளைப்பாறுதல்
இயேசு, உங்கள் பாரங்களையும் கவலைகளையும் அவர்மேல் வைக்கும்படி அழைக்கிறார் (சங்கீதம் 55:22, 1பேதுரு 5:7). அவர் உங்களை சரியான வழியில் நடத்துவார். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், உங்கள் வாழ்க்கைவாழ்க்கையில் அர்த்தம் உள்ளது. எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். (பிலிப்பியர் 4:7)
என் அன்பு நண்பனே, நீ அநேக காரியங்களைக் குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கலாம். பாவத்தின் பாரத்தை உன்னுடன் சுமந்துகொண்டு இருக்கலாம். உன்னுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வே இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் எல்லா கதவுகளும் மூடப்படவில்லை. இயேசுவிடம் வா. அவரில் உன்னால் இளைப்பாறுதல் கண்டடைய முடியும். தனது நுகத்தினால் உன்னை அவர் வழி நடத்துவார்.