நிச்சயமற்ற காலங்களில் நிச்சயம்

Niccayamaṟṟa kālaṅkaḷil niccayam

உலகம் இதுவரை கேட்டிராத விசித்திரமான ஒரு  தொற்றுநோயால் (கோவிட்-19)  பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொற்றுநோய் சீனாவில் தோன்றி, மிக வேகமாக பரவி, இன்று உலகம் முழுவதையும் ஸ்தம்பிக்க செய்துள்ளது. இந்த தொற்றுநோய் வளர்ந்த, வளர்ந்து வரும் மற்றும் வளர்ச்சியடையாத நாடுகள் என எல்லா தேசங்களையும் பாதித்துள்ளது. எந்த ஒரு நாடும் இதற்கு தப்ப முடியவில்லை. பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை மற்றும் இந்த தொற்றுநோயால் உயிர் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, உலகெங்கிலும் உள்ள மக்களின் இதயங்களில் ஒருவிதமான குழப்பம் பெருகி வருவதையும் நாம் காண்கிறோம். ஆம், ‘நிச்சயமற்ற தன்மை’ என்ற ஒரு நிலை.

இந்த கொள்ளைநோய் எப்போது முடிவடையும்? என்று எல்லோருடைய மனதிலும் ஒரு பெரிய கேள்விக்குறி உள்ளது. உலகம் அதன் பழைய நிலைக்கு திரும்புவதை எப்போது காணலாம்? இதுவரை இருந்ததைப் போல இனி தன்னிலைக்குத் திரும்புமா? சாதாரண பொதுமக்களிடம் வரும் போது, இந்த கேள்விக்குறி இன்னும் தனிப்பட்டதாக மாறும். இந்த தொற்று நோயிலிருந்து நாம் தப்பி பிழைப்போமா? எங்கள் குடும்பத்தில் வயதானவர்கள் தப்புவார்களா? உலகெங்கிலும் உள்ள பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பித்து வழியறியாது நிற்பதால், இந்த தொற்றுநோயின் தாக்கம் முழுமையடையும்போது நாம் வேலைகளுடன் இருப்போமா? பள்ளி, கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்கள், தங்களுக்கு ஒரு வேலை மற்றும் வாழ்வாதாரங்களை கண்டுபிடிக்க முடியுமா என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.

நம் ஒவ்வொருவர் இதயங்களிலும் காணப்படுகின்ற இந்த கேள்விகளுக்கு, நம்மால் எவ்வித பதில்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆம், நாம் எதிலும் நிச்சயமற்ற ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். நம்முடைய வாழ்வாதாரங்கள், அன்புக்குரியவர்கள் மற்றும் நம்முடைய சொந்த உயிருக்கே அச்சுறுத்தல் இருப்பதைக் காணும்போது, இப்படிப்பட்ட நிச்சயமற்ற காலங்களில் எதேனும் ஒரு நிச்சயம் நமக்கு இருக்கிறதா என்பது தான் கேள்வி. பதில் என்னவெனில் ‘ஆம், இருக்கிறது’ என்பதே.

நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசிக்கும் போது, நம் கவனத்தை ஈர்க்கும் ஒரு வசனத்தை எபிரேயர் 13:5-ல் காணமுடியும். ஏனெனில் கடவுள் “… நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை” என்று கூறுவதை இங்கு பார்க்க இயலும். கர்த்தராகிய ஆண்டவர், ஒருபோதும் நம்மை விட்டு அவர் விலக மாட்டார் என்று கூறும் போது, அதன் தாக்கங்கள் மிக ஆழமானவை. நம் வாழ்வில் நாம் எந்த நிலைமையில் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. நம்முடைய வேலை வாய்ப்புகள் இருண்டதாகத் தோன்றினாலும், நம் சொந்த மற்றும் அன்புக்குரியவர்கள் ஆரோக்கியம் நிச்சயமற்றதாகத் தோன்றினாலும் ஒரு நிச்சயம் நமக்கு உண்டு. அந்த நிச்சயம் யாதெனில், மாறாத தேவ வார்த்தை நமக்கு தரும் நம்பிக்கை, அவர் நம்மை விட்டு விலகமாட்டார், கைவிட மாட்டார் என்பதே. இந்த நிச்சயமற்ற சூழ்நிலையில் கடவுள் மீது நம்பிக்கை இருக்குமானால், அவர் நம்மை கைவிட மாட்டார் என்ற உறுதியை நாம் காணலாம்.

பரிசுத்த வேதாகமம், யோவான் 3:16-ல் “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி இவ்வளவாய்  உலகத்தில் அன்பு கூர்ந்தார். ” என்று கூறுவதை பார்க்கிறோம். கேள்வி என்னவென்றால், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் அளிக்கப்பட்ட தேவனின் மாறாத அன்பின் மீது நாம் நம்பிக்கை வைத்திருக்கிறோமா என்பதே. அவர் நம்மை விட்டு விலகுவதில்லை, நம்மை அவர் கைவிடுவதில்லை என்ற வாக்குத்தத்தம் இந்த நிச்சயமற்ற காலங்களை கடந்து செல்ல நம்மை பெலப்படுத்தும். இச்சிறு கட்டுரையின் வாசகர்கள் ஒவ்வொருவரும் இரட்சகரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் மீது உங்கள் நம்பிக்கையை வைத்து, எதிர்காலம் எதுவாயினும் கிறிஸ்துவில் உறுதியாய் நிற்க ஊக்குவிக்கிறோம்.