“அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” – யோவான் 14: 6
வரலாறு முழுவதும் இதுபோன்ற அதிகாரபூர்வமான மற்றும் உறுதியான கூற்றை யாரும் இதுவரை கூறவில்லை. பலர் வழியைக் காட்ட முயன்றனர், சிலர் உண்மையை ஆராய முயன்றனர், மேலும் ஏராளமானோர் ‘வாழ்க்கை’ மற்றும் அதன் மர்மங்களை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். ஆனால், இயேசுவைத் தவிர வேறு யாரும் ‘நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்’ என்று சொல்லவில்லை.
இந்த இயேசுவை நீங்கள் நிராகரிக்கலாம், நீங்கள் அவரை ஏற்றுக்கொள்ளலாம் – உங்கள் விருப்பம் எதுவாக இருந்தாலும், நீங்கள் அவரைத் தவிர்க்க முடியாது.
” சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.” – யோவான் 8:32
எதில் இருந்து விடுதலை?
- அடிமைத்தனங்கள் – பாரம்பரிய அடிமைத்தனம், கலாச்சார அடிமைத்தனம், அடிமைத்தன பழக்கங்கள்.
- குற்ற உணர்வுகள் – நான் எதற்கும் சரியானவன் அல்ல மற்றும் இலக்கு இல்லை.
- பயம் – மரணம், மரணத்திற்குப் பின் வாழ்க்கை, எதிர்காலம் மற்றும் தெரியாதவை.
- வெறுமை மற்றும் தனிமை – வாழ்க்கையில் சிலவற்றை இழந்த உணர்வு, மற்றும் இந்த வெற்றிடத்தை நிரப்ப வாழ்க்கையின் இறுதி வரை நீடிக்கும் வீணான முயற்சிகள்.
- செழிப்பு, ஆரோக்கியம் மற்றும் நன்மைக்கான தீராத ஏக்கம்.
- வாழ்க்கையில் அமைதியையும் படைத்த கடவுளுடன் நெருக்கத்தையும் பெறுவதற்கான பயனற்ற முயற்சிகள்.
மனிதனில் அடிமைத்தனம் மற்றும் இழப்பு பற்றிய உணர்வுகள் உள்ளது – இந்த இழப்பு உணர்வு நாம் வீழ்ச்சியடைந்த உலகில் வாழ்கிறோம் என்பதில் வேரூன்றியுள்ளது என்று பரிசுத்த வேதாகமம் கற்பிக்கிறது. நாம் அனைவரும் ஒரு பாவ இயல்பால் பாதிக்கப்பட்டுள்ளோம்: “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களானார்கள்” (ரோமர் 3:23). நாம் எவ்ளவேனும் முயற்சித்தும், நம் படைப்பாளரிடமிருந்து நம்மைப் பிரிக்கும் குற்றச் சுமையிலிருந்து நம்மை விடுவிக்க முடியவில்லை.
நம்முடைய பாவத்தால் ஏற்படும் கலக்கத்தை தீர்க்க கடவுள் தம்முடைய குமாரனை அனுப்பினார். “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” (யோவான் 3:16). இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்ததன் மூலம் நாம் கடவுளை அடைய வழி உருவாக்கியது. அவர் தமது இரத்தத்தை சிந்தியதன் மூலம் நமக்கு இரட்சிப்பை பெற்றுத்தந்தார். அவருடைய மரணமும் உயிர்த்தெழுதலும் கடவுளுக்கும் மனிதகுலத்திற்கும் இடையில் ஒரு புதிய மற்றும் நித்திய உடன்படிக்கையை ஏற்படுத்தியது.
கடவுளை அடைய வழி இயேசு கிறிஸ்துவில் தனிப்பட்ட நம்பிக்கை மூலமேயாகும். உங்கள் வாழ்க்கையையும் இருதயத்தையும் கிறிஸ்துவிடம் ஒப்படைப்பதன் மூலம் இன்று நீங்கள் அவரிடம் வரலாம். பரிசுத்த வேதாகமம் இவ்வாறு கூறுகிறது: “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.” (யோவான் 1:12).
இயேசுவே சத்தியம். அவரை நம்புங்கள், அவர் உங்களை விடுவிப்பார்!